ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேவைக்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளரரைத் தெரிவு செய்ய முடியாதென, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு, தயாராகவிருப்பதாகவும் வேறு எவரின் தேவைக்காகவும் வேட்பாளரை தெரிவு செய்யப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றத்துக்காக வாக்களித்த மக்களின் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக, மக்கள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(சே)