கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிக்கு சொந்தமானதாக கூறப்படும் வெல்லம்பிட்டி செம்பு தொழிற்சாலையில் பணியாற்றிய சம்பவத்துடன் தொடர்புபட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களுள் ஒருவாரன கருப்பையா ராஜேந்திரன் எனும் அப்துல்லா எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று பிறப்பித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபருக்கு எதிராக தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்ட நீதவான் குறித்த நபரை 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.(சே)

Previous articleகாலியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
Next articleநவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல்