இவ் வருட அகில இலங்கை தமிழ் மொழி  தினப்போட்டியின் மாகாண மட்ட போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.

முதல் நிலை பெற்ற மாணவர்களையும் அதன் பொறுப்பு ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி எம்.சாந்தினி தலைமையில் நடைபெற்றது.

இதன் அடிப்படையில் கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் ஆகிய மட்டங்களில் பங்குபற்றி இப் பாடசாலை மாணவிகள் பல போட்டிகளில்  முதல் இடங்களைப் மாகாணத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.

இதில் தனி இசை, குழு இசை,பா ஓதல், நாட்டிய நாடகம், இலக்கிய நாடகம்  ஆகிய போட்டிகளில் முதன் நிலையினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.   

தற்போது நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப்போட்டின் மாகாண மட்டத்தில்,  5 போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்று புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதன்நிலையினை பெற்றுள்ளது.

இந் நிகழ்வில்,  பாடசாலை அதிபர்,  பிரதி அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.(சி)

 

Previous articleஜனாதிபதி வேட்பாளரை நாமே தெரிவிசெய்வோம்-பிரசன்ன ரணவீர
Next articleரொய்ஸ் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்