தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒளிரூட் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட பிராந்தியங்களுக்கான அமைச்சால் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும், தலவாக்கலை சென் கிளாயார் ஸ்டாலிங் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 06 குடும்பங்களுக்கும் என மொத்தம் 30 குடும்பங்களுக்கு விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சினால் நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அன்றாட மக்கள் பயன்படுத்தும் எரிவாயு அடுப்பு, மெட்லஸ், கேத்தல்கள், சமலறை உபகரணங்கள் உட்பட அத்தியவசிய உபகரணங்களை விசேட பிராந்திங்களுக்கான அமைச்சரவை அல்லா அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமாக கலாநிதி வேலுசாமி ராதாகிருஸணன் தலைமையில் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
ஒரு குடும்பத்திற்கு சுமார் இருபதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. (சி)






