அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் பாதயாத்திரை ஆரம்பமானது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பாதயாத்திரை இன்று களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘அரசாங்கமே உடனே வெளியேறு’ எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறையிலிருந்து இன்று காலை ஆரம்பமான பாதயாத்திரை, இன்று மாலை மொரட்டுவையை வந்தடையவுள்ளது.
அதனைத்தொடர்ந்து, குறித்த பாதயாத்திரை நாளை பிற்பகல் 3 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர், அங்கு பொதுக் கூட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. (நி)






