நோய் தாக்கத்தின் காரணமாக கல்முனையில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை 1 டி பிரிவு சி.பி.எப் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் உள்ள கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 65 வயதுடைய புஞ்சி அப்பு கந்தசாமி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (நி)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Previous articleலிபியாவில் போர் நிறுத்தம் வேண்டும்:ஐ.நா சபை
Next articleமகிந்த, கோட்டபாய செய்த உடன்படிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது!