ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஒரு நாள் சேவை தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாள்ளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்டவர்கள் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. (நி)

Previous articleமூன்று தோட்ட வீதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு!
Next articleலிபியாவில் போர் நிறுத்தம் வேண்டும்:ஐ.நா சபை