ஈராக்கின் பல தசாப்த கால பரப்புரைகளைத் தொடர்ந்து பாபிலோன், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அசர்பைஜானின் தலைநகரான பாகுவில் நடைபெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுக் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது ஒரு நாட்டின் எல்லைக்குள் உள்ள ஆறாவது உலக பாரம்பரிய தளமாக காணப்படுகின்றது.
யூப்ரடீஸ் நதியில் உள்ள பண்டைய மெசொப்பொத்தேமிய நாகரிகத்தின் தொட்டில் என்று பாபிலோன் அழைக்கப்படுகின்றது. (நி)








