இலங்கையில் 2030 ஆம் ஆண்டில் ஐந்து பேருக்கு ஒருவர் 60 வயதை தாண்டியவராக இருப்பார் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.
நாட்டின் வயதான மக்கள் தொகையை எதிர்காலத்தில் எதிர்கொள்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் குறிப்பிட்டுள்ளது.
தெற்காசியாவிலேயே வயதான மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இலங்கை காண்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டிலுள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலத்தை 79 ஆகவும், ஆண்களின் சராசரி ஆயுட்காலத்தை 72 ஆகவும் அதிகரித்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் காணப்படும் சுகாதார வசதி முன்னேற்றம் காரணமாக, தற்போது இலங்கையில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலமான 60 வயதை இன்னும் 19 வயதினாலும், ஆண்களின் சராசரி ஆயுட்காலமான 60 வயதை 12 வருடங்களினாலும் அதிகரித்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (நி)






