அவன்கார்ட் மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய, சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றையதினம், நிஸ்ஸங்க சோனதிபதி உட்பட 8 பேரை கைது செய்யுமா சட்டமா அதிபர் நேற்று விசேட அறிவுறுத்தல் ஒன்றினை விடுத்திருந்தார்.
அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக்கப்பல் மோசடி தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சட்டமா அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பதில்பொலிஸ்மா அதிபர் நேற்று விசேட உத்தரவொன்றினை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவன் கார்ட் விவகாரத்தில் சிக்கிய நிலையில் தற்போது நாட்டில் 6 முக்கிய நபர்கள் உள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (நி)






