தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட யூனியனுக்குரிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கு நடாத்தப்பட்ட தேர்தலையடுத்து குறித்த பீடத்தின் மாணவர் குழுக்களிடையே கடந்த செவ்வாய்கிழமை இரவு மேதல்கள் இடம்பெற்றன.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களில் காயமடைந்த 07 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்தனர்.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு ஊடகங்களும் செய்திகளை வெளிட்ட நிலையிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. (நி)

Previous articleமொழிகளை கற்பதன் மூலமே நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படும்!(காணொளி இணைப்பு)
Next articleகணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!