ஜிப்ரால்டர் கடற்பகுதியில், ஈரானிய எண்ணெய் கப்பலை, பிரிட்டனின் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி, குறிப்பிட்ட கப்பல் சிரியாவிற்கு சென்று கொண்டிருந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பிரிட்டனின் கடற்படையினர் கப்பலை கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்கா விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே, கிரேஸ் -1 என்ற கப்பலை கைப்பற்றியதாக, ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
மரைன் படைப்பிரிவினரின் உதவியுடன், ஜிப்ரால்டர் துறைமுக மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள், ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர்.
30 மரைன் 42 கொமாண்டோக்கள், இந்த நடவடிக்கைகாக பிரிட்டனில் இருந்து ஜிப்ரால்டரிற்கு அனுப்பட்டுள்ளனர்.
பனாமா கொடியுடன் காணப்பட்ட அந்த கப்பலுக்குள், ஹெலிக்கொப்டரில் இருந்து கயிற்றின் மூலம், மரைன் வீரர் ஒருவர் இறங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னர் ஏனையவர்கள் படகு மூலம் அந்த கப்பலை நோக்கி சென்றுள்ளனர்.
இதேவேளை, தனது எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதை கடுமையாக கண்டிததுள்ள ஈரான், இது குறித்து விளக்கம் கோருவதற்காக, பிரிட்டன் தூதுவரை அழைத்துள்ளது. (சி)










