ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், ஆறு மாத கால தையல் பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டு, 144 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஜ.ரி.அமிஸ்டிம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது, தையல் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த பயிற்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்களும் காட்ச்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)

Previous articleமட்டக்களப்பில் யானை தாக்குதல் : மூன்று நாட்களில் மூவர் பலி
Next articleஈரானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டனின் கடற்படை