முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடல் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்

முள்ளியவளையினை சேர்ந்த 45 அகவையுடைய சண்முகநாதன் சத்தியபவான் என்ற குடும்பஸ்தர் காஞ்சிரமோட்டையில் விவசாயம் செய்து வந்துள்ளார் இவரது விவாய கிணற்றில் இவர் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அருகில் உள்ள விவசாயிகள் முள்ளியவளை பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பொலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலத்தினை மீட்டு மாஞ்சோலை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள்

மரணவிசாரணைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள்

Previous articleகேப்பாபுலவு பிரம்படி வயல் வெளியில் வெடிப்பு சம்பவம்
Next articleமட்டக்களப்பில் யானை தாக்குதல் : மூன்று நாட்களில் மூவர் பலி