அரசாங்கம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியம் வழங்கும் முஸ்லீம் நபர்கள், சஹ்ரான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சம்பந்தப்பட்டவர் என்று கூறுகின்றனர்.
அதனால்தான் சஹ்ரான் தொடர்பில் முறைப்பாடு கிடைத்த போதும், நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
சஹ்ரானுக்கு எதிராக வந்த முறைப்பாட்டை விசாரணை செய்ய முயற்சித்த பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த அரசாங்கத்தினர் அடிப்படை வாதிகளுக்கு உதவி புரிந்தார்கள். அடிப்படைவாதிகள் வளர சுதந்திரம் வழங்கினார்கள். சங்கரிலா விடுதியில் இரண்டு மனித வெடிக்கு வெடித்த போதும், தாஜ் சமுத்திரா, ஹில்டன் விடுதிகளில் குண்டு வெடிக்கவில்லை. அவை ஏன் என்று தேடிப் பார்த்தால் உண்மை தெரிய வரும்.
நாம் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இந்த பேரணியை நடாத்தவில்லை. அனைத்து முஸ்லீம் மக்களும் அடிப்படைவாதிகள் அல்ல. சஹ்ரான் குழுவினரை காட்டிக்கொடுத்த முஸ்லீம் மக்கள் இந்த மேடையில் இருக்கின்றார்கள். நாம் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வைராக்கியத்தினை உருவாக்குவதற்காக இந்த கூட்டத்தினை நடாத்தவில்லை. அடிப்படைவாத போக்குக்கொண்ட இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு எதிராக, இந்த பேரணியை நடாத்தியிருக்கின்றோம்.
சஹ்ரான் குழுவினர் 2010 தமது வேலையை ஆரம்பித்திருந்தாலும், 2017 ம் ஆண்டே ஆயுதங்களை கொண்டு வந்து வெடிக்க வைத்திருக்கின்றார்கள். இந்த இடத்தில்தான் இவர்கள் கைது செய்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர்களை அரசு கைது செய்யவில்லை. என குறிப்பிட்டுள்ளார். (சி)






