ஆட்பதிவு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் சேவைகள் இன்று நடைபெறமாட்டாது என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் குணதிலக தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு நாள் சேவையினை மக்களுக்கு வழங்க முடியாது இருப்பதாக தெரிவித்துள்ள அவர் அதனை சீர் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். கணனியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யும் பணி நிறைவடைந்ததும். ஒரு நாள் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








