மன்னார் – முள்ளிக்குளம் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும், நில அதிர்வு மானிகளில் இது பதிவாகவில்லை என கூறப்படுகின்றது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு புவிசரிதவியல் நிபுணர் ஒருவர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வவுனியாவின் பல பகுதிகளிலும் இன்று காலை சிறியளவான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)





