முல்லைத்தீவு மாவட்டத்தில், பௌத்த மயமாக்கலுக்கான ஆபத்தினை எதிர்கொண்டுள்ள செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல உற்சவமும்,தமிழர் திருநாளுக்குமான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஆலயத்தின் வளாகம் இன்று இளைஞர்கள் மற்றும் ஆலயத் தொண்டர்களின் உதவியுடன் சிரமமதானம் செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நாளை மறுதினம், அதிகாலை 3 மணியளவில் கோட்டக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு, நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இன்றையதினம், ஆலய வளாகம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அளவீட்டு பணிகளுக்குட்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லைக்குள் ஆலய வளாகம் அமைந்துள்ளதா என்பதை அறியும் நோக்கிலேயே குறித்த அளவிட்டுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக சுட்க்காட்டப்படுகின்றது.
இவ் அளவீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களை,நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள விகாரையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸார் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(சி)





