மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஒருவரின் ஆயுதமும் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்றுவரும் நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை இரண்டு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்று பிடிக்கமுற்பட்டபோது குறித்த இளைஞன் விபத்துக்குள்ளாகிய நிலையில் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்களுக்கும், குறித்த போக்குவரத்து பொலிஸாருக்கும் இடையில் வாய்;த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு நின்ற சிலரால் போக்குவரத்து பொலிஸார் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் ஒருவரின் கைத்துப்பாக்கி பறித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து குறித்த பகுதியில் படையினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேவேளை, மட்டக்களப்பு புதூர் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து, இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சி)

Previous articleயாழ் கொழும்புத்துறையில் கற்றல்வள நிலையம் திறந்து வைப்பு
Next articleநீராவியடிப்பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி