கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் 280 திட்டங்கள் 4500மில்லியன் ரூபாவில் இந்த அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு கையளிக்கப்பட்டன.

இதன்கீழ் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கற்றல் வள நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் த.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம், கல்வி பணியக உதவி மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.(சி)

Previous articleமரண தண்டனை கண்டிப்பாக நிறைவேறும் : ஐ.ம.சு.மு
Next articleயாழ் கொழும்புத்துறையில் கற்றல்வள நிலையம் திறந்து வைப்பு