நாடளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையிலும், புகையிரத தலைமை அதிகாரிக்கு போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புகையிரத ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை புகையிரதநிலைய சாரதிகள் தொழிற்சங்கம் கடந்த இரண்டு வாரத்தின் நாட்களில் சம்பள உயர்வு, பதவியுயர்வு காரணமாக பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டிருந்தநிலையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வவுனியாவில் பயணிகள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா புகையிரத நிலையம் மூடப்பட்டு பொலிஸார் மற்றும் விமானப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதனால் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
புகையிரத நிலையத்திற்குச்சென்ற பயணிகள் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.
புகையிரத ஊழியர்களின் போராட்டம் காரணமாக இரு புகையிரதங்கள் வவுனியாவில் தரித்து நிற்பதையும் அவதானிக்க முடிந்தது. (நி)





