கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றும், எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே பாரவூர்தியின் சாரதியும், டிப்பர் வாகன சாரதியும் உயிரழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் பாரவூர்தியை செலுத்திவந்த சாரதி மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக, பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். (நி)

 

Previous articleஅரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
Next articleஇன்றைய வானிலை அறிக்கை!