உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி, 12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உலக கிண்ண தொடரின் 41 ஆவது லீக்போட்டி, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தீர்மானம்மிக்க போட்டியாக நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது நாணயற்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 இலக்களை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனடிப்படையில், 306 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த நியுசிலாந்து அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது, 45 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 186 படுதோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி 12 ஆவது உலக கிண்ண போட்டியின் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Previous articleபுகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு!
Next articleகிளிநொச்சியில் விபத்து:இருவர் உயிரிழப்பு! (காணொளி இணைப்பு)