மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதி நிதிகளை இன்று இலங்கையிலுள்ள கனடா நாட்டுத் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மேரி ஜோஷ்சி மற்றும் தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கான முதலாவது செயலாளர் பீட்டர் வண்டி ஆகியோர் சந்;தித்தனர்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் பிரதி நிதிகளை சந்தித்த இவர்கள் காத்தான்குடியின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் இன நல்லிணக்கம் சமூங்கங்களுக்கிடையிலான ஒற்றுமை நல்லுறவு போன்றவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.
குறிப்பாக கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர் காத்தான்குடி மக்களின் நிலைமை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்;.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்;.எம்.சபீல் நழீமி, உப செயலாளர்; எம்.சி.ஜௌபர் ஆகியோரும் கலந்துகொண்டனர். (சி)






