கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசி மூலமாக அச்சுறுத்தினார் என, முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே, வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாக, ஏற்கனவே முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, இன்று காலை 10.00 மணியளவில், திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பிரிவில், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முன்னிலையாகியிருந்ததார். (சி)

Previous articleஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவரிடம், இன்று விசாரணை
Next articleஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு