‘வட மாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வட மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு, கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவமுள்ளவர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கமைய, முதலாவது கலந்துரையாடல் நாளை நடத்தப்படவுள்ளது.
மாதாந்தம் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில், ஆர்வமுள்ள எவரும் கலந்து கொள்ள முடியும் என, ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (சி)