சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில் விருது பெற்ற படைப்பாளிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில், இந்த வருடம் விருது பெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் ஜனாதிபதியால் பாராட்டப்பட்டுள்ளனர்.
படைப்பாளிகளை பாராட்டுதல் மற்றும் அவர்களது எதிர்கால கலை நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
பிரான்ஸ் நீஸ் விருதுகள் விழா, ஜப்பான் ஒசாக்கா ஆசிய திரைப்பட விழா, மொஸ்கோ நகரில் இடம்பெற்ற சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் விழா போன்ற விழாக்களில் விருது பெற்ற இலங்கை திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி படைப்பாளிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். (நி)








