திருகோணமலை – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 42 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த 328 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உணவு முத்திரை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு நேற்று மாலை மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் ‘புதிதாய் சிந்திப்போம் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவோம்’ எனும் திட்டத்தின் கீழ், குறித்த பயனாளிகளுக்கு உணவு முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், க.துரைரெட்ணசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இணைப்பாளர் திரு.குகதாஷன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் மூதூர் பிரதேச அமைப்பாளர் ஏ.ஆர்.இத்ரீஸ், மூதூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எஸ்.துரைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த உணவு முத்திரை பெற்றவர்களில் அதிகளவானோர் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாhலும் பாhதிக்கப்பட்ட பயனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleஇங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!
Next articleநாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதியாக தெரிவானேன்! (படங்கள் இணைப்பு)