பாடசாலை மாணவர்களுக்கு கலாச்சார ஆடைகளும், போரினால் பாதிக்கப்பட்ட தனிமையில் வாழும் 20 முதியவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக நேற்றைய தினம் பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், 80 மாணவிகள் பயன்பெறும் வகையில் 37 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான கலாச்சார ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வட்டு இந்து வாலிபர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்ட தனிமையில் வாழும் 20 முதியவர்களுக்கு 60 ஆயிமை; ரூபா பெறுமதியில் உலர் உணவு பொருட்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த உதவிகளுக்கான நிதியினை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நலன்விரும்பி ஒருவர், அவரது உறவினரின் நினைவு தினத்தினை முன்னிட்டு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








