முல்லைத்தீவு ஒதியமலை பகுதியில், பொது மக்களின் விவசாய காணியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த யானை, அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை யானை விழுந்ததை அவதானித்த மக்கள், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கிணற்றில் வீழ்ந்த யானையை பாதுகாப்பாக மீட்டு, காட்டுப் பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர். (சி)





