வவுனியா தாண்டிக்குளம் பகுதியில், இன்று காலை புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளன.

இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில், 10.45 மணியளவில், புகையிரத கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகள், புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளன.

தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள, பயணிகள் தரிப்பிடப் பகுதிக்கு பின்புறமாகவுள்ள மாடுகளும், தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகே ஒரு மாடும், புகையிரதத்துடன் மோதி உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இதேவேளை, கடந்த வாரம் முகமாலை பகுதியில், 21 ஆடுகள் புகையிரத கடவையில் சென்ற போது, புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலை காரணமாக, கால்நடைகள் மேய்ச்சல் தரைகளை, தண்ணீரை நாடிச் செல்லும் போது,

புகையிரத கடவைகளிலுள்ள பயிர்ச் செடிகளை உண்ணுவதற்காகச் செல்கின்ற போது உயிரிழந்து வருவதாக, மக்கள் குறிப்பிட்டுள்ளனர். (சி)

Previous articleபோதைப்பொருள் விற்று போராட்டம் நடத்தியவர் அல்ல பிரபாகரன் : கோடீஸ்வரன்
Next articleஇரணைப்பாலை, மாத்தளன் மீனவர்கள் முறைப்பாடு