மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாராந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் நடைபெற்றது.
மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாகரை பிரதேச செயலகமும் வம்மி வட்டவான் வித்தியாலயமும் இணைந்து போதையில் இருந்து விடுபட்ட தேசம் எனும் தொணிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதி நாடகம் என்பனவற்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
வம்மி வட்டவான் வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலமானது திருமலை வீதி ஊடாக சென்று அம்பந்தனாவெளி காளி கோயிலை சென்றடைந்தது.
ஆலய முன்றலில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வம்மிவட்டவான் பிள்ளையார் ஆலயம் மற்றும் கோமத்தனா மடு கிராமங்களிலும் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கோணலிங்கம், உதவி பிரதேச செயலாளர் அ.அமலினி, அதிபர் எஸ்.இந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் க.ரூபன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை வாழைச்சேனை பிரதேச செலயத்தினால் போதைப் பொருள் பாவனையினை தடுப்பது தொடர்பான ஓவியப் போட்டி பிரதேச பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவனினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. (நி)








