ஐந்து பிரதான மதங்களினதும் பாடப்புத்தகங்களை ஆராய்வதற்காக கல்வி அமைச்சினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மத பாடப்புத்தகங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்இ சமூகத்துக்கிடையில் பிரிவினைகளை உண்டாக்கும் வகையிலும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் இக்குழு ஆராயவுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் ஜயந்த விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.
அதன்படி 11ம் தரம் வரையிலான பெளத்தஇ கத்தோலிக்கஇ கிறிஸ்தவஇ இஸ்லாம்இ ஹிந்து மதங்களின் பாடப்புத்தகங்களும் உயர்தரத்தின் ஆசிரியர் கையேடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
பாடப்புத்தகங்களை ஆரம்பம் முதல் ஆய்வு செய்வது கடினமான பனி எனவும்இ அதற்காக கல்வி அமைச்சின் விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் ஆய்வின் இறுதி அறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது உள்ள மத பாடப்புத்தகங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்இ சமூகத்துக்கிடையில் பிரிவினைகளை உண்டாக்கும் வகையிலும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்திருந்தால் அவை நீக்கப்படும் எனவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் ஜயந்த விக்ரமநாயக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(மா)








