முன்னாள் பாதுகாப்பு செயலர் கேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகிய இருவரும் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் கேமசிறி பெர்னான்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவில் இன்று காலை அனுமதிக்கப்படுள்ளார் என கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டபிள்யு.கே.விக்கிரமரத்தின தெரிவித்துள்ளார். இதேவேளை பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர நாரேன்பிட்டிய பொலிஸ் வைத்தியசாலையிலும் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினை தடுப்பதற்கு முயற்சிக்காமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலர் கேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரை இன்றயதினம் கொழும்பு குற்றவிசாரணைத் திணைக்களத்தில் ஆயராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(மா)






