இலங்கையினுள் அமெரிக்க முகாம் ஒன்றை அமைக்க எவ்வித திட்டமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல் ஒத்துழைப்பை பரிமாறிக் கொள்ளும் நோக்கத்தில் மாத்திரமே இடம்பெறுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ டெப்லிடிஸ் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் இறையாண்மையை முழுமையாக மதிப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள ‘சோபா’ ஒப்பந்தத்தின் சில சரத்துக்களில் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படுவதாக வெளியான செய்தி தொடர்பிலேயே தனது பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘சோபா’ ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க இராணுவம் இந்நாட்டினுள் சுதந்திரமாக கடமைகளில் ஈடுபடவும் பொருட்களை எடுத்து வரவும் இந்நாட்டு சட்டத்திற்கு கட்டுப்படாமல் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் அண்மையில் சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)






