கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற இரு பாரவூர்திகள், இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.

முன்னே சென்ற பாரவூர்தியின் சக்கரத்திலிருந்து காற்று வெளியேறிய காரணத்தினால், சடுதியாக குறித்த பாரவூர்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் பாரவூர்திக்கு பின்புறமாக சென்ற மற்றை பாரவூர்தி, பின்புறமாக மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், பாரவூர்தியில் பயணித்த உதவியாளர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில், கிளிநாச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (சி)

Previous articleநுவரேலியாவில் தமிழ், சிங்கள மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு
Next articleபெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஆராய்வு