செழிப்பான தேசத்தை உருவாக்க போதையை இல்லாதொழிப்போம் எனும் தொனிப் பொருளில் போதைக்குஎதிரான விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று காலை காத்தான்குடிபிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும்ஜனாதிபதியின் செயற்திட்டத்துக்கமைய காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில்நடைபெற்ற இந்த விழிப்புனர்வு வேலைத்திட்டத்தில் போதைக்கு எதிரான பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய மாணவர்களின் வீதியோர விழிப்புனர்வு நாடகமும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, சமுர்த்திதலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்கள் போதைக்கு எதிரான சுலோகங்களை தாங்கி விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.(சி)






