தந்தை செல்வா கலையரங்கம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தார்.

பாடசாலை அதிபர் எழில் வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(மா)

Previous articleஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முக்கியத்துவமானது-தலிபான் பயங்கரவாதிகள்
Next articleபுலிகள் போதைப்பொருளை விற்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்தனர்-ஜனாதிபதி