தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழு புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
குறித்த இணையத்தள அறிமுக நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது.
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பி.எச்.மனத்துங்க, செயலாளர் சமன் திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸில் செய்யும் முறைப்பாடுகள் திருப்தியான முறையில் தீர்த்துவைக்கப்படாவிட்டால் அல்லது தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்படுத்தப்பட்டால் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்து தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்ற போதிலும் அதில் மக்கள் நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்தச் சிக்கலைத் தவிர்த்து பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதற்கு இந்தப் புதிய நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்கள் டபிள்யு டபிள்யு டபிள்யு டொட் என்பிசி டொட் ஜிஒவி டொட் எல்கே என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் முறைப்பாடுகளைப் பதிவு செய்து கொள்ளமுடியும் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. (நி)









