கிளிநொச்சி – நாச்சிக்குடாவில் அரிய வகை மீனைப் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் முழங்காவில் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றைய தினம் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 1200 கிலோ கிலோ அளவிலான அரியவகை மீன் ஒன்று அகப்பட்டிருந்தது.

குறித்த அரியவகை மீனை பார்வையிடுவதற்காக நாச்சிக்குடா கடற்கரைக்கு நேற்றைய தினம் பலர் குழுமியிருந்ததை காணமுடிந்தது.

இந்நிலையில் அரியவகை மீனை பிடித்தமைக்காக மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் கடற்றொழிலாளர்களின் வலையில் புள்ளி சுறா சிக்கியது. இதனையடுத்து குறித்த கடற்றொழிலாளி கைது செய்யப்பட்டு நான்கு ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் 13 இலட்சம் பெறுமதியான படகு, இயந்திரம், மற்றும் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் கடற்படையினரின் கட்டுபாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வலை விரித்து விட்டு, அதிகாலை சென்று வலையை இழுத்த போது சுமார் 1200 கிலோ புள்ளி சுறா சிக்கியதாகவும், அது தடை செய்யப்பட்ட மீனினம் என்று தங்களுக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ள கடற்றொழிலாளர்கள் தானாக வலையில் சிக்கிய மீனுக்காக தண்டனைகளை அனுபவிப்பதோடு, தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவெளை வலையில் சிக்கிய புள்ளி சுறா கடற்கரை பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நி)

Previous articleமட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு)
Next articleதேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் புதிய இணையத்தளம் அறிமுகம்!