அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம் – தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பெண்கள் மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கல்நேவ பிரதேசத்தை சேர்ந்த பெண்களே விபத்தில் உயிரிழந்தவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளனர்.

தம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த சிற்றூந்து ஒன்றும் அனுராதபுரம் தொடக்கம் தம்புத்தேகம நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

சிற்றூந்தில் பயணித்த மேலும் 03 பெண்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்துள்ளனர். (நி)

 

 

Previous article2008ல் காணாமல் போன மோட்டார் சைக்கில் 2019ல் கண்டுபிடிப்பு
Next articleசாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கம்!