யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட குருநகர் பகுதியில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், 5ஜி அலைக்கற்றை கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

யாழ். மாநகர சபை இதற்கு அனுமதி வழங்கியதாகவும், இந்தக் கோபுரம் அமைத்தால், இதன் மூலம் வெளிப்படுத்தப்படும் கதிர் வீச்சினால், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் உட்பட மக்கள் பாதிக்கப்படுவதுடன், புற்றுநோய் உண்டாகும் என, மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், 4ஜி தொழில்நுட்ப தொலைத்தொடர்பு கோபுரங்களினால், சிட்டுக்குருவி இனமே அழிந்து வரும் நிலையில், 5ஜி தொழில்நுட்பம் மனித மூளையை தாக்குவதுடன், மூளைப் புற்றுநோயை உண்டாக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், குருநகர் பகுதியில், 5ஜி அலைக்கற்றை கோபுரம் நிறுவப்படுவதற்கு, அப்பகுதி மக்கள், இன்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

Previous articleசீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம்! (படங்கள் இணைப்பு)
Next article2008ல் காணாமல் போன மோட்டார் சைக்கில் 2019ல் கண்டுபிடிப்பு