இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழரசுக்கட்சியின் வடக்கு கிழக்கு கிளைகளின் தலைவர்கள், கனடாக் கிளை உறுப்பினர்கள் என பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் பொதுச் சபை கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு, இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி மாநாடும், மாலை 5 மணியளவில் வாலிபர் முன்னணி மாநாடும் இடம்பெறவுள்ளது.

அத்தோடு, நாளைய தினம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் பேராளர் மாநாடும் இடம்பெறவுள்ளது. (நி)

Previous articleஅம்பாறை – திருக்கோவில் திருட்டுச் சம்பவங்கள்! (படங்கள் இணைப்பு)
Next articleசீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம்! (படங்கள் இணைப்பு)