நாட்டில் நிலவும் சாதாரண நிலமையை அடுத்து, வவுனியா இறம்பைக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் சோதனை சாவடி, இன்று காலை அகற்றப்பட்டுள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில், ஹொரவப்பொத்தானை வீதியில், இரானுவத்தினரால் இவ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வந்தது.

நாட்டில் தற்போது நிலவும் சீரான நிலமையை அடுத்து, இன்று காலை குறித்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியாவிலுள்ள பெரும்பாலான சமய வழிபாட்டு தளங்கள் மற்றும் பேரூந்து நிலையம், வங்கிகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பும் அகற்றப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து, வன்னி பிராந்திய இராணுவ பொறுப்பாளரின் உத்தரவின் பேரில், வவுனியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் சீரான நிலை காணப்படுவதினால் சோதனைச்சாவடிகளை அகற்றுமாறு எமக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், அவற்றினை அகற்றுவதாக, சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். (சி)

Previous articleமட்டு மாநகர சபையின், 4 ஆண்டு அபிவிருத்தி திட்டத்திற்கான வாக்கெடுப்பு நிகழ்வு
Next articleஅத்தியாவசிய சேவையான பின்னும் புகையிரத பணிப்புறக்கணிப்பு தொடருகிறது