மட்டக்களப்பு மாநகர சபையின் நான்கு ஆண்டு அபிவிருத்தி திட்டத்திகான வாக்கெடுப்பு நிகழ்வு, இன்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை நான்கு ஆண்டு அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்கான வட்டார ரீதியாக சென்று வட்டார மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வட்டாரத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள் என்ன என்பது தொடர்பாக மக்கள் பகுபற்றுதளுடன் பெற்றுக்கொண்ட தகவல்க அடிப்படியில் 20 வட்டாரத்திற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தனி தனி வட்டங்களின் திட்டங்களை தயாரித்த நிலையில் அவற்றை ஒன்றிணைத்து முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஆவணங்களை உள்ளூராட்சி திணைக்களங்களுக்கும் மற்றும் உலக வங்கிக்கும் அனுப்புவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட திட்டங்களை கிராம மட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஊடாக வாக்கெடுப்பு மூலம் முன்னிலைப்படுத்தும் வாக்கெடுப்பு நிகழ்வு, மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
வாக்கெடுப்பு மாநகர பிரதி முதல்வர் கே.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் மற்றும் பிரதம கணக்காளர், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், வட்டார கிராம மட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். (சி)






