பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விசாரணைக்கு அழைக்க வேண்டும் : ரஞ்ஜன்
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட அனைவரையும், பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளுக்கு அழைக்க வேண்டும் என, அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராமன்ற அமர்வில் இவ்வாறு வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த, பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு, மிகவும் கௌரவத்துடன் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை அழைக்குமாறு கோருகின்றேன்.

கேள்விகளைக் கேட்பதற்கு அல்ல.

அவர் பல்வேறு புதிய தகவல்களை வத்தினானுக்குச் சென்று வெளிப்படுத்தியிருந்தார். தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று, காலை 6.45க்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறியிருந்தார். பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களும் வெளியிட்டிருந்தார்கள்.

குறிப்பிட்ட ஒரு நட்சத்திர விடுதியொன்றில் தாக்குதல் நடத்தாததன் காரணம், அந்த விடுதியில் முக்கியஸ்தர் ஒருவர் இருந்ததாக, முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டிருந்தார்.

அவரையும் தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும்.

தாக்குதல் இடம்பெற 10 நாட்களுக்கு முன்னதாக, பாதுகாப்பு பிரிவினர் தனக்கு தெரிவித்ததாக மனோ கணேசன் கூறியிருந்தார்.
தனது தந்தைக்கு பாதுகாப்பு பிரிவினர் கூறியதாக, அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதலை 225 உறுப்பினர்களும் அறிந்து வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருந்தார்.
நான் அதனை ஏற்க மாட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Previous articleகிளிநொச்சியில் விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி
Next articleஅவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்