கிளிநொச்சியில், இன்று மாலை இடம்பெற்ற விபத்தில், 27 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து காக்காகடை சந்தி ஊடாக, வட்டக்கச்சி செல்லும் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரின் கவனயீனம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாக, சம்பவத்தை அவதானித்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Previous articleவெடிகுண்டு மிரட்டல் : இந்திய விமானம் அவசரமாக தரையிறக்கம்
Next articleமெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விசாரணைக்கு அழைக்க வேண்டும் : ரஞ்ஜன்