எயார் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்று, வெடி குண்டு மிரட்டல் காரணமாக, லண்டனில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா மும்பாயில் இருந்து அமெரிக்கா சென்று கொண்டிருந்த ஏ.எல் 191 என்ற விமானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டனில் தரையிறங்கியுள்ளதாக, எயர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதற்ற நிலையை அடுத்த, பிரிட்டனின் போர் விமானங்களுக்கு, அதிவேகத்தில் பயணம் செய்து, எயர் இந்திய விமானத்தை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக, பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்திய விமானம் தனியான இடத்தில் நிறுத்தப்பட்டதாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.(சி)






