வடக்கு கிழக்கில் இராணுவ முகாங்களை மூடி, மலையகத்தில் முகாம்களை அமைப்பது, இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்.
மலையகத்திலே தற்போது ஆங்காங்கே இராணுவ முகாம் முளைக்கின்றது எமக்கு இராணுவ முகாம் தேவையில்லை கம்பெரலிய திட்டத்தின் மூலம் எமக்கு அபிவிருத்தியே வேண்டும்.
வடக்கு கிழக்கில் இராணுவ முகாங்களை மூடிவிட்டு, மலையகத்தில் திறக்க வேண்டியதில்லை அது எமது இளைஞர்களுக்கு அச்சுறுத்தலலுத்தலாகவே அமைகின்றது
மலையகத்தில் இரண்டு பிள்ளையார் சிலைகள் காணாமல் போயுள்ளது. இராணுவ பொலிஸ் சோதனைச் சாவடிகள் இருக்கும் போது, எவ்வாறு சிலை காணாமல் போகின்றது?
மலையக இளைஞர்கள் எப்போதும் ஆயுதம் ஏந்தாதவர்கள். அவர்களை கைது செய்வதற்கு நாம் பாராளுமன்றத்தில் கை உயர்த்த முடியாது. இல்லாத பிரச்சினையை உருவாக்கி, மலையகத்தில் இளைஞர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
அவசரகாலச்சட்டத்தினை பிழையாக பயன்படுத்தி, தோட்ட அதிகாரிகள் மலையக இளைஞர்களை அச்சுறுத்துகின்றார்கள்.
பெருந்தோட்ட மக்கள் வறுமையில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு சமுர்த்தி வழங்குவதற்கு எதிராக பதுளையில் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாம் ஆதரிக்கும் அவசரகாலச்சட்டத்தினை பயன்படுத்தி, மலையக இளைஞர்களை அச்சுறுத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
என தெரிவித்தார் (சி)






