கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயரை சந்தித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகையை, சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு, திருவண்ணாமலை ஐவர் மலையில் உள்ள ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது, கல்வி பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்த ஆயர், உரிய தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளார். (நி)

Previous articleவைத்தியர் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை- சி.ஐ.டி
Next articleமலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய கருத்தடை குறித்து விசாரணை வேண்டும்-திலகர் எம்.பி